Sunday 22 December 2013

வளம்பெருக்கும் வாஸ்து சாஸ்திரம்

                       

வளம்பெருக்கும் வாஸ்து சாஸ்திரம் இராமசாமி        இந்து பப்ளிக்கேசன்  நூலில் இருந்து


ஒரு வீடு என்ன மாதிரி கட்டபட்டிருக்கிறது என்பது முக்கியமல்ல.   இன்னும் சொல்ல போனால் எந்த ராசிக்காரர் அந்த வீட்டில்  குடி இருக்கிறார் என்பதும் முக்கியமல்ல.

அப்பறம் என்னதான் முக்கியம்?

நாம் குடி இருக்கும் வீட்டின் கிழக்கு பக்கமும், வடக்கு பக்கமும் எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம்.

மனித உடலில் தலை பிரதானம்.  ஒரு வீட்டிற்கு தலை வாசல் பிரதானம்.  அதை போல் அந்த வீட்டிற்கு ஈசானியம் என்பது மனிதனுக்கு தலை போன்றது. 

நீங்கள் வாஸ்த்துவை  பற்றி  அறிந்திருக்கலாம்.  அறியாமல் இருக்கலாம். அல்லது வாஸ்த்து நிபுணராக கூட இருக்கலாம்.  நீங்கள்  எந்த பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.

வடக்கு திசை  என்பது மேல்புறம்.  தெற்கு திசை என்பது கீழ்புறம்.  நாம் வசிக்கும் பூமி ஒரு நொடிக்கு ஏழு மைல் வேகத்தில்  கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது.    

இந்த பூமி சுற்றுவதால் நாமும் பூமியோடு சேர்ந்து சுற்றி கொண்டிருக்கிறோம். வேகம் ஒரே சீராக இருப்பதால் நாம் ஒரே இடத்தில் இருப்பது போன்ற ஒரு மாய தோற்றம் இருக்கிறது.  சினிமா பிலிம் கூட இந்த தத்துவத்தில் தான் இயக்க படுகிறது.  

சுழலும் பூமி மீது  இடை விடாமல் சூரிய ஒளி விழுந்து கொண்டிருக்கிறது.  இந்த சூரிய ஒளி நம் வீட்டின் மீது தடை இல்லாமல் விழுந்தால் வீடு சுபிச்சம் பெரும். 

வீட்டில் செல்வம் தங்கும்.  நிம்மதியும் சந்தோசமும் நிலைத்திருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.  அனைத்து வகையிலும் சிறந்து வாழ்வார்கள்.  

சூரிய ஒளி அந்த வீட்டின் மீது விழாமல்  இருந்தால்வாழ்க்கையை தொலைத்தவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையின்  மீது எந்த பிடிப்பும் இருக்காது.  

சரி .....வாஸ்து குறை இருந்தால்எந்திரங்களை பதிக்கலாம், பிரமீடுகளை வைக்கலாம்அதிஷ்ட்ட  மீன்  வாங்கி வளர்க்கலாம்.  வழியா இல்லை பூமியில்.

நல்ல யோசனைதான்.  ஆனால் ஒரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நமது வீடு நொடிக்கு ஏழு மைல் வேகத்தில், அதாவது மணிக்கு 25000 மைல் வேகத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டுஇருக்கிறது.

அந்த வீட்டின் மீது காலை வெயில் விழ வேண்டும்.  உங்கள் மனையில் கிழக்கு பகுதியில் காலி இடம் வைத்து வீடு கட்ட வேண்டும்.  எவ்வளவு முடியமாஅவ்வளவு.

மாறாக கிழக்கில் இடம் இல்லமால் வீடு கட்டி விட்டால்அந்த கிழக்கு பகுதியை ஒட்டி இன்னொருவர் வீடு கட்டினால், உங்கள் வீடு சுபிச்சம் இழந்துவிடும்.
உடல் நல கோளாறு, கடன் தொல்லை, நிம்மதி குறைவுகுடும்பத்தில் ஒற்றுமை குறைவு என்று அவல நிலையில் வாழ வேண்டிய நிலை வந்து விடும்.

அதனால் வீடு கட்டும் போது கிழக்கை  கவனித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

புதிய வீடு கட்ட பிளான் போட்டு தரப்படும்  

சித.சுப்பையா

வாஸ்து ஆலோசனைக்ககு 9626099423

Friday 9 August 2013

வணிகர்கள், சுற்றுச்சூழல், வருமானம்

    வணிகர்கள்   கவனத்திற்கு
 
 

 

வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு நம் தொழில்,   இயற்கைச்சுழலை பாதிக்காதவாரு நாம் செயல்பட வேண்டும்

பேனா,பிஸ்கட்,சாக்க்லட் போன்ற பேக்கிங் பிளாஸ்டிக் கவர்கள்,கிழிந்தகேரிபேக் போன்றவற்றை   ஒரு அட்டை பெட்டியுலும், அத்துடன் சிறுசிறு துண்டு அட்டைபெட்டிகளையும், ஒதுக்கி சேமித்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர் வியாபாரிடம் போடவும். 
நமக்கு வருமானமும் கிடைக்கும்.நம் சுற்றுச்சூழல்  குப்பைகள் இல்லாமல்  இருக்கும்.  தாங்கள் எப்போது வந்து பார்த்தாலும் எங்கள் கடையில் பல்வேறு சிராமதிற்கு நடுவில் இம்முறைப்படியே மறுசுழற்சி செய்கிறோம். இப்பொதுப்பணியில் தாங்கள் ஈடுபடுத்திக்கொள்ளுமாறு அன்புடன் அழைப்பது
                      
 அன்னம் ஸ்டோர்மேலையூர்9626099423           
           
 தெரு சுத்தம் செய்பவர்கள்,குப்பை பொறுக்குபவர்கள் எடுத்துக்கொள்வர்கள் என குப்பைகளை கொட்டுவதும் தவறு.  நல்ல விலைக்கு கொடுக்கவேண்டும் என குப்பைகளை வைத்துக்கொள்ளாமல் அவ்வப்போது பழைய பேப்பர் வியாபரியிடம் கொடுக்கப்பழகிக்கொள்ளவேண்டும்  

Wednesday 24 July 2013

குடும்பத்தலைவிகளின் கவனத்திற்கு


செலவே  இல்லாமல் தோட்டம் வளம்பெற



‍‌‌

                 தாங்கள் பயன்படுத்திய ஷாம்பு, எண்ணெய், மளிகை பொருட்களின் பிளாஸ்டிக் கவர்கள், கிழிந்த கேரீப்பைகளை வீட்டு தோட்டத்து குப்பையில் போடாமல் சேமித்து வைத்து, பழைய பத்திரிகை,அட்டை,பொட்டலம் போட்டு வந்த பேப்பர் முதற்கொண்டு  இரு வகையாக பழையபேப்பர் வியாபரிடம் போடவும்.       
            
              அவ்வாறு செய்யாமல் தோட்டத்து குப்பையில் போடுவது வீட்டோட நிலத்தடிநீர் ஆதாரத்தை மிக கடுமையாக பாதித்து,.பல வகையான நோய்களை வரவழைக்கும் தவறான செயல்.         

இனி காய்கறித்தோல், வீணானபழம்,உணவுப்பொருட்கள் மற்றும்  வீட்டுத்தோட்டத்து குப்பைகளை மட்டும் குப்பைத்தொட்டியில் போடவும். அது ஒரு வருட முடிவில் இயற்கை உரமாக உங்கள் தோட்டத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.